OUR CLIENTS
ரூ.48 லட்சம் மதிப்பில் மீனவர் நல திட்டம் தொடக்கம்
ரூ.48 லட்சம் மதிப்பில் மீனவர் நல திட்டம் தொடக்கம் Posted on 22-Dec-2017 ரூ.48 லட்சம் மதிப்பில் மீனவர் நல திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி, டிச, 22-
தூத்துக்குடியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் மீனவர் நலத் திட்டங்களை துறைமுகசபை தலைவர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் திரேஸ்புரம் கடற்பகுதியில் 48 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் மீன் ஏலக்கூடம், தெரு விளக்குகள் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் துறைமுகசபை தலைவர் ஜெயகுமார் பேசுகையில், மீனவ கிராமப்பகுதிகளில் கடலோர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு பயிற்சி, திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளது. என்.ஜி.ஒ மூலம் மீன்கள் குளிர்சாதன கூடம் உள்ளிட்டவைகள் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை பொறுத்தவரை நிலக்கரி கையாளுதல் 2 மில்லியன் டன் வரை குறைவாக உள்ளதால் சரக்கு கையாளுதல் குறைய வாய்ப்பு உள்ளது. துறைமுகத்தின் நிலக்கரித் தளம் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பெரிய அளவிலான நிலக்கரி கப்பல்கள் கையாளப்படும் என்றார்.

Label