OUR CLIENTS
மோடி வித்தைகள் இனி பலிக்காது கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் பேச்சு
மோடி வித்தைகள் இனி பலிக்காது கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் பேச்சு Posted on 22-Dec-2017 மோடி வித்தைகள் இனி பலிக்காது கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் பேச்சு

சென்னை, டிச. 22-
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா, மாவட்ட தலைவர்கள், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக பேராயர் எஸ்றா சற்குணம், தாமஸ் உம்மன், லயோலா பொறியியல் கல்லூரி இயக்குனர் அல்போன்ஸ் மாணிக்கம், தென்னிந்திய திருச்சபை பொருளாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் பங்கேற்றனர். விழாவின்போது கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏழை- எளியோருக்கு தையல் எந்திரங்கள், கண் கண்ணாடிகள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி உள்ளிட்டவற்றை திருநாவுக்கரசர் வழங்கினார்.

ஏசு கிறிஸ்து அன்பையும், மனித நேயத்தையும் போதித்தவர். அந்த விழாவை கொண்டாடுவதில் பெருமை படுகிறோம். வருகிற ஆண்டு சுபிட்சமான ஆண்டாக அமையும். குஜராத் தேர்தலில் மோடியின் கனவு பலிக்கவில்லை. அவரை ஓட ஓட ராகுல் தண்ணி காட்டினார். அதனால்தான் 13 முறை மோடி சுற்றி வந்தார். இனி அவரது வித்தைகள் பலிக்காது. அடுத்து வருகிற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ஜே.எம்.ஆரூண், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, தமிழ்நாடு ராகுல்காந்தி மக்கள் நல பாசறை தலைவர் மயிலை தரணி, மீனவர் அணி தலைவர் கஜநாதன், விழாவுக்குழு தலைவர் ஜி.கே.தாஸ், சுகுமார் தாஸ், எர்னஸ்ட்பால், சேவியர், மைதிலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Label