OUR CLIENTS
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு Posted on 22-Dec-2017 கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 22-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இரு தினங்களுக்கு, ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுவதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்தோடு காணப்படும் என்றும், சிலமுறை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை, கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல், இம்மாதம் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 39 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் இயல்பான மழைப்பொழிவான 42 சென்டி மீட்டரை விட, 6 சதவிகிதம் குறைவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Label