OUR CLIENTS
ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கக்கோரி வழக்கு :தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு
ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கக்கோரி வழக்கு :தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு Posted on 22-Dec-2017 ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கக்கோரி வழக்கு :தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

மதுரை, டிச. 22-
ஓகி புயலில் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி 20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஓகி புயலால் குமரி மாவட்ட மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். உயிரிழந்த மீனவ குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாயையும், பொது மக்களுக்கு 10 லட்ச ரூபாயையும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதில் பாகுபாடு உள்ளதாகவும், ஒக்கி புயலால் உயிரிழந்த அனைவருக்கு 20 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Label