OUR CLIENTS
எதிர்கால இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் : பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கருத்து
எதிர்கால இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் : பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கருத்து Posted on 22-Dec-2017 எதிர்கால இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் : பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கருத்து

கோவை, டிச. 22-
பொருளாதாரத்தின் அடிப்படையில் எதிர்கால இந்தியா அதிக ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும் என பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் 
பின்னர் செய்தியாளரிடம் பேசினார். எதிர்கால இந்தியாவின் பொருளாதாரம் என்பது பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறுவதும், ஏழைகள் 
பரம ஏழைகளாக மாறுவதுமாக இருக்கும் என்றார். தற்போதைய பொருளாதார வளர்ச்சியன் பயன் குறித்து யாரும் வெளியில் சொவ்லுவதில்லை. 

48 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தார்கள் என்பதையும், தற்போது அது 28 சதவீதமாக குறைந்துள்ளது என்பதை பற்றி மட்டுமே பேசி வருவதாக குறிப்பிட்டார். 1991 முதலான காலக்கட்டத்தில் கீழ்தட்டு மக்களின் வருமானம் 2 பங்கு பெருகியுள்ளதென்றால், மேல்தட்டு மக்களின் வருமானம் 2,000 மடங்கு பெருகியுள்ளது என்பதை யாரும் சொல்வதில்லை என்றார்.

புதிய பொருளாதார கொள்கை தொடங்கி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து கருத்தரங்கில் விவாதிகப்பட்டது. இதில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Label