OUR CLIENTS
சேலம் அருகே மதுக்கூடமாக மாறிய ரயில்வே தண்டவாளம் பொதுமக்கள் புகார்
சேலம் அருகே மதுக்கூடமாக மாறிய ரயில்வே தண்டவாளம் பொதுமக்கள் புகார் Posted on 22-Dec-2017 சேலம் அருகே மதுக்கூடமாக மாறிய ரயில்வே தண்டவாளம் பொதுமக்கள் புகார்

சேலம், டிச. 22-
சேலம் செவ்வாய்பேட்டை மார்கெட் ரோடு பகுதி ரயில்நிலையம் அருகே உள்ள தண்ணடவாளப் பகுதி, அங்கு உள்ளவர்களின் மதுஅருந்தும் தற்காலிக கூடமாக மாறியுள்ளது.

பொது இடத்தில் மது அருந்தும் இளைஞர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாள் தோறும் ஏராளமான மக்கள் கடந்து செல்லும் மார்கெட் ரோடு பகுதி ரயில்நிலையம், சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ளது. 

வேங்கடப்பன் சாலையில் உள்ள இரண்டு மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் அவர்கள், அதனை அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். மது அருந்துபவர்களில் சிலர் போதையில் தண்டவாளத்தின் அருகே மயங்கிவிடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொது இடங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுப்படும் இளைஞர்கள் மீது அபராதத்தை மட்டும் வசூலித்து விட்டுவிடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Label