OUR CLIENTS
வீட்டை பாதுகாக்க “திருடர்கள் ஜாக்கிரதை” புதிய செயலி அறிமுகம் டிஐஜி தொடங்கி வைத்தார்
வீட்டை பாதுகாக்க “திருடர்கள் ஜாக்கிரதை” புதிய செயலி அறிமுகம் டிஐஜி தொடங்கி வைத்தார் Posted on 22-Dec-2017 வீட்டை பாதுகாக்க “திருடர்கள் ஜாக்கிரதை” புதிய செயலி அறிமுகம் டிஐஜி தொடங்கி வைத்தார்

மதுரை, டிச. 22-
மதுரையில் பூட்டிய வீட்டை பாதுகாக்கும் வகையில் திருடர்கள் ஜாக்கிரதை என்ற புதிய செயலியை டி.ஜ.ஜி பிரதீப் குமார் அறிமுகம் செய்தார். 

மதுரை எஸ்.பி அலுவலகத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லும் பொது மக்கள் பயன்படும் வகையில் மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக புதிய அப்லிகேசன் (செயலி) வெளியிடப்பட்டது. திருடர்கள் ஜாக்கிரதை என்னும் இச்செயலியை டி.ஜ.ஜி பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பொதுமக்கள் இந்த செயலியை செயல்படுத்த தங்கள் விவரங்களை செலுத்த வேண்டும். செயலியல் நான்கு வழிகள் இருக்கும். இதில், பூட்டிய வீட்டை கவனி, காவல் நிலையம் தகவல், போக்குவரத்து வழிமுறைகள், முக்கிய அறிவிப்பு (தற்போதைய கிரைம்) போன்ற விபரங்கள் வெளியிடப்படும். இதன் மூலம், காவலர், வீட்டின் உரிமையாளர் எளிதாக தகவல் தொடர்பு கொண்டு கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். இந்த செயலியை, பிளே ஸ்டோர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இச்செயலியில் இருக்கும் புகார் பெட்டி வழியாக மொபைல் கேமரா மூலம் அனைத்து தவறுகளையும் புகைபடம் மூலம் தெரிவிக்கலாம் என்றார். 

Label