OUR CLIENTS
டிடிவி 40.707 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!
டிடிவி 40.707 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி! Posted on 24-Dec-2017 டிடிவி 40.707 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!

 சென்னை, டிச.24
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 40,707  வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அதிமுக, வேட்பாளர் இ. மதுசூதனனைத் தவிர மீதமுள்ள 57 வேட்பாளர்கள் டெபாசிட் தொகைகளை இழந்தனர். பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளைக் கூட தொட முடியவில்லை.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார். இது ஆளும் கட்சியான அதிமுகவிற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதியான ஆர்.கே .நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் கடந்த 2017, ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. நீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாக ஆர்.கே. நகரில் இரண்டாவது முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின்போது மீண்டும் பணப்பட்டுவாடா புகார்கள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன. ஆனாலும் புகார்களை ஓரம் தள்ளி வாக்குப் பதிவு  நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 77.68 சதவீத வாக்குகள் பதிவாயின. 1,76,885 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை - ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. தொடக்கம் முதலில் இருந்தே குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார்.  இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக மற்றும் தினகரன் அணியின் முகவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், கைகலப்பு, குழப்பம் காரணமாக வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. 3 ஏஜெண்டுகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர் துணை ராணுவப் படையினர் வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளுக்கு அவர்கள் பாதுகாப்பு அளிக்க வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது.


சாலை மறியல்

மூன்று ஏஜெண்டுகளை வெளியே அனுப்பியதைக் கண்டித்து ராணி மேரி கல்லூரிக்கு வெளியே சாலை மறியல் நடந்தது. போலீசார் வந்து சமாதானம் செய்தனர். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை சிக்கல் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்தது.

துவக்கச் சுற்றுகளில் முதலிடத்தைப் பிடித்த டிடிவி தினகரன் பெற்ற வாக்குகளில் பாதி வாக்குகளைத்தான் அதிமுக பெற்றது. அதிமுக பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் திமுக பெற்றது. இந்த நிலை 19வது சுற்று வரையிலும் நீடித்தது குறிப்பிடத் தகுந்தது.


வாக்கு விவரம்:

19வது சுற்றின் இறுதியில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்:

3ம் சுற்று வாக்கு எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 15,868

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 7,033

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 3,750

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 459

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 117

நோட்டா வாக்குகள்: 333

4ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 20,298

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 9,672

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 5,091

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 737

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 220

நோட்டா வாக்குகள்: 333

5ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 22,447

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 13,057

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 6,606

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 1245

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 408

நோட்டா வாக்குகள்: 640

6ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 29,255

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 15,181

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 7,986

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 1509

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 485

நோட்டா வாக்குகள்: 798

7ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 34,346

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 17,471

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 9,206

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 1732

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 519

நோட்டா வாக்குகள்: 798

8ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 39,940

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 19,779

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 10,307

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 1732

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 519

நோட்டா வாக்குகள்: 798

9ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 44,094

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 19,525

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 10,233

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 1933

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 571

நோட்டா வாக்குகள்: 925

10ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 48,808

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 25,367

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 13,015

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 2,347

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 712

நோட்டா வாக்குகள்: 1,298

11ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 60,284

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 30,745

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 15,918

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 2,607

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 837

நோட்டா வாக்குகள்: 1,537

12ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 60,584

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 30,555

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 15,977

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 2,607

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 839

நோட்டா வாக்குகள்: 1,537

13ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 64,627

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 33436

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 17410

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 2,607

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 839

நோட்டா வாக்குகள்: 1,537

14ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 68,712

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 36,217

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 18924

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3316

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,126

நோட்டா வாக்குகள்: 1,537

15ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 72,413

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 38,966

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 20,388

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3535

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,185

நோட்டா வாக்குகள்: 2,000

16ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 76,701

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 41,526

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 21,827

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3645

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,185

நோட்டா வாக்குகள்: 2,005

17ம் சுற்று எண்ணிக்கை:

டிடிவி தினகரன்: வாக்குகள் 81,315

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 44,522

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 22,966

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3645

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,236

நோட்டா வாக்குகள்: 2,203

18ம் சுற்று எண்ணிக்கை:  (4:45)

டிடிவி தினகரன்: வாக்குகள் 86,472

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 47,115

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 24,075

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3645

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,236

நோட்டா வாக்குகள்: 2,203


19வது இறுதி சுற்று வாக்குகள் எண்ணிக்கை:  (5:07)

டிடிவி தினகரன்: வாக்குகள் 89,013 (50.32%)

அதிமுக - மதுசூதனன்: வாக்குகள் 48,306 (27.31%)

திமுக - மருதுகணேஷ்: வாக்குகள் 24,651 (13.91%) 

(பதிவான ஒரே ஒரு தபால்வாக்கு திமுகவுக்கு கிடைத்தது)

நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்: வாக்குகள் 3,860

பாஜக - கரு.நாகராஜன்: வாக்குகள் 1,417

நோட்டா வாக்குகள்: 2,373

டிடிவி தினகரன் பேட்டி

வாக்கு எண்ணிக்கை துவங்கும் பொழுது மதுரையிலிருந்த டிடிவி தினகரன் சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கினார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். “ஆர்.கே.நகர் மக்களுக்கு எனது நன்றிகள். தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே.நகர் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார். 

தொண்டர்கள் ஆராவாரம்

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பல இடங்களில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

டிடிவி தினகரன், மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், முன்னாள் தமிழக முதல்வரும், ஆர்.கே. நகரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெயலலிதாவின் நினைவு இடத்திற்கும் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கும் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்தார். அவருடன் தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

தேர்தலில் பதிவான 1,76,885 வாக்குகளில், ஒரு வேட்பாளர் டெபாசிட்-ஐ திரும்ப பெற குறைந்தபட்சம் 29,481 வாக்குகளைப் (6% வாக்குகளைப்) பெறவேண்டும். இந்தக் கணக்குப்படி திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, ஆகியவை டெபாசிட்டை இழந்தன.   இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.



கடந்த 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகள் பெற்றார்.  


 அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு விசில் அடித்து சாதித்து காட்டி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவராகவே தினகரன் அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.  ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியின் மூலம் நான் இல்லாமல் தமிழக அரசியல் களம் இல்லை என்பதை தினகரன் ஆணித்தரமாகவே உணர்த்தி இருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.

 

Label