OUR CLIENTS
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஜம்மு&காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு :6 நாடுகளின் பிரதிநிதிகள் பிரகடனம்!
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஜம்மு&காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு :6 நாடுகளின் பிரதிநிதிகள் பிரகடனம்! Posted on 27-Dec-2017 ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஜம்மு&காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு :6 நாடுகளின் பிரதிநிதிகள் பிரகடனம்!

இஸ்லாமாபாத், டிச.27-
   காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என இஸ்லாமாபத்தில் நடந்த 6 நாடுகளின் பிரதிதிகள் கூட்டத்தின் இறுதியில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய 6 நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்ற கூட்டம் முதல் முறையாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. 
இந்த கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அன்று காஷ்மீரில் அமைதியும் ஸ்திரதன்மையும் நிலைத்திருக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை இந்தியா, பாகிஸ்தான் அமல் 
செய்ய வேண்டும் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்படவேண்டும் என 6 நாடுகளும் கூட்டுப் பிரகடனம் வெளியிட்டன.

இந்த செய்தியை பாகிஸ்தான் பத்திரிகையான  ‘டான்’ (Dawn) வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியின் படி சபாநாயகர்கள் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் பாகிஸ்தான் தேசிய பாராளுமன்ற சபாநாயகரான அயாஸ் சாதிக் மூன்று நாடுகளையும் சம்மதிக்க வைத்தார். ‘‘ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஈராக் -சிரியா பிரச்சனை உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.  இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எங்களால் பேசாமல் இருக்க முடியாது’’ என்று அயாஸ் சாதிக் வாதாடினார்.

இறுதியில் அயாஸ் சாதிக்கின் கடுமையான முயற்சியால் ஆறு நாடுகளும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான கூட்டுப் பிரகடனத்தை அறிவிக்க முன்வந்தன. இதில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியை சம்மதிக்க வைப்பதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் கடுமையாக முயற்சித்ததாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது. ரஷ்யப் பிரதிநிதியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Label