OUR CLIENTS
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்!
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்! Posted on 27-Dec-2017 டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்!

சென்னை, டிச.27-
சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் எடுத்த நடவடிக்கை காலம் தாழ்ந்த நடவடிக்கை என துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ். குருமூர்த்தி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.ஆர்.கே. நகர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக் குழு கூட்டம்  சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தென் சென்னை வடக்கு மாவட்டச்செயலாளர் வி.பி. கலைராஜன், நெல்லை மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, கட்சி செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணி துணைச் செயலாளர், கட்சி செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், பார்த்திபன், தங்கத் தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுபற்றி துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட் ஒன்று
தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைவர்களாக செயல்படத் தொடங்கியுள்ளனர். தலைவரின் பாதத்தை தொடுவதையும், அவர்களுக்காக லஞ்சம் வாங்குவதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்  என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைச்செய்தி குறித்து கருத்து கூறும் பொழுது எஸ் குருமூர்த்தி கூறியுள்ளார்.

 ட்விட் இரண்டு
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட மற்றொரு செய்தி குறித்து ட்விட்  செய்தியை எஸ். குருமூர்த்தி தந்துள்ளார், இந்த பலவீனமான தலைவர்கள்,ஞ் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர். கையாலாகாத தலைவர்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அதிர்ச்சி தோல்விக்கு பிந்திய தொடர் விளைவாக இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ”தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது’  என டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு குருமூர்த்தி ட்விட் வெளியிட்டுள்ளார்.

Label