OUR CLIENTS
அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்!
அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்! Posted on 27-Dec-2017 அரசியல் நிலைப்பாடு குறித்து வரும்  31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்!

சென்னை, டிச.27-
சூப்பர் ஸ்டார் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை தனது ரசிகர்களை சந்திக்கிறார். 

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த நிகழ்வில் என்னை வாழவைக்கும் தெய்வங்களே என கூறி  ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சை தொடங்கினார்.

ரசிகர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கதாநாயகன் ஆசையில் சினிமாவுக்கு வரவில்லை. வில்லனாக நடித்துக்கொண்டிருந்த என்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம். ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தார். 
சில நேரங்களில் நானும் தவறுகளை செய்துள்ளேன். டிச.,31ல் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும். எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன. எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 

அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும். அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். எனினும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Label