OUR CLIENTS
தொண்டு நிறுவனங்கள் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு
தொண்டு நிறுவனங்கள் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு Posted on 27-Dec-2017 தொண்டு நிறுவனங்கள் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு

புதுடெல்லி, டிச. 27-
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், குறிப்பிடப்பட்ட 32 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் 1 மாதத்தில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தப் பணம் தேசநலனுக்கு எதிராக செலவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடங்கும் இந்த வெளிநாட்டு நிதி கணக்குகள், மத்திய அரசின் பொதுநிதி மேலாண்மை நடைமுறை (பிஎப்எம்எஸ்) உடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், நடை முறை சிக்கல்கள் தவிர்க்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வெளிநாட்டு நிதியை, தேசவிரோத செயல்களுக்கு பயன் படுத்துவதை தடுப்பதற்காக ‘வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டம் 2010’ இயற்றப்பட்டுள்ளது.

“இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் அல்லது அனுமதி கோரியுள்ளவர்கள் குறிப்பிடப்பட்ட 32 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதிக்குள் கணக்கு தொடங்க வேண்டும். இந்த விவரத்தை முறையான வடிவில் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.

Label