OUR CLIENTS
உஜ்ஜைன் கோயிலில் கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்- ஒரு கால் இன்றி எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் சாதனையாளர் வேதனை
உஜ்ஜைன் கோயிலில் கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்- ஒரு கால் இன்றி எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் சாதனையாளர் வேதனை Posted on 27-Dec-2017 உஜ்ஜைன் கோயிலில் கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்- ஒரு கால் இன்றி எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் சாதனையாளர் வேதனை

ம.பி, டிச. 27-
வலது கால் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் சாதனையாளர் அருனிமா சின்ஹா, உஜ்ஜயினி கோயிலில் கேலிக் குள்ளாக்கப் பட்டுள்ளார். வாலிபால் வீராங் கனையான அவர், 2011-ம் ஆண்டு ரயில் கொள்ளை யர்களால் தாக்கப்பட்டு, தள்ளிவிடப்பட்டு, வலது காலை இழந்தார். பின்னர் செயற்கைக் காலுடன், விடாமுயற்சியோடு எவரெஸ்ட் சிகரம் ஏறி புகழ்பெற்றார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலில், தனது உடல் ஊனம் கேலியாக நகைப்புக்குள்ளாக்கப் பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

எவரெஸ்ட்டில் ஏறும் போது அடைந்த வேதனை யைவிட, இது அதிக வலியைத் தந்ததாக குறிப்பிட்டுள்ள அருனிமா சின்ஹா, தனது பதிவை பிரதமருக்கும் மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கும் டேக் செய்துள்ளார்.

Label