OUR CLIENTS
அரசியல் சட்டத்தை மாற்றுவோம் :மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே ஆவேசம்
அரசியல் சட்டத்தை மாற்றுவோம் :மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே ஆவேசம் Posted on 27-Dec-2017 அரசியல் சட்டத்தை மாற்றுவோம் :மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே ஆவேசம்

பெங்களூரு, டிச. 27-
அரசியல் சட்டத்தை மாற்றுவோம். அதற்காகத் தான் நாங்கள் ஆட்சிக்கே வந்திருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கூறினார்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பிராமண இளைஞர் அணி மாநாட்டு நடந்தது.  இதில் இளைஞர் அணி இணையதளம் மற்றும் மகளிர் அணியை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேசியதாவது: இப்போது எல்லாம்மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுகிறவர்கள் எல்லாம், அவர்களின் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது என்ற அடையாளமே தெரியாதவர்கள். 

 மதச்சார்பின்மை பற்றி  பேசுகிறபோதுஎல்லாம் அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். அரசியல் சாசனத்தில் அது இடம் பெற்றுள்ளது என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். மனுநீதியைப் பற்றி யும் குறிப்பிடுகிறார்கள். மனுநீதி என்பது அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ற சட்டங்கள். இப்போது நாம் அம்பேத்கர் வகுத்த நீதியை பின்பற்றுகிறோம்.அரசியல் சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். அது பல முறை மாற்றப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் நாங்களும்  அதை மாற்றுவோம். அரசியல் சட்டத்தை மாற்றவே நாங்கள் வந்துள்ளோம்.

மதச்சார்பின்மை பற்றி பேசுகிறவர்கள் அவர்களின் அடையாளமே தெரியாதவர்கள்.  அந்த அடையாளம் இருந்தால் ஒருவருக்கு சுயமரியாதையே கிடைக்கும்.  ஒரு  முஸ்லிம், ஒரு கிறிஸ்தவர், ஒரு பிராமணர், லிங்காயத் அல்லது இந்து என்று ஒருவன் தன்னை அடையாளம் காட்டினால் தான் நான் மகிழ்ச்சி அடைவேன்.  ஆனால் மதச்சார்பின்மைவாதி 
என்று சொல்கிற போது தான்பிரச்னையே  உருவெடுக்கிறது.

எனவே சாதி அடையாளம்.. மத அடையாளத்தை கண்டிப்பாக மக்கள் அடையாளம் காட்டவேண்டும். உங்கள் ரத்தம் என்ன என்பதை தெரிந்தால் நிச்சயம்நான் தலைவணங்குவேன். 

ஆனால் மதச்சார்பின்மைவாதி என்று சொல்கிறபோது உங்களைப் பற்றிய சந்தேகம் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மத்தியஅமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே ’
இப்படி சர்ச்சை கிளப்பும் வகையில்பேசுவது இது முதன்முறை அல்ல.  இப்போதைய பேச்சும் சர்ச்சையை உருவாக்கி விட்டது.  இதுகுறித்து கர்நாடக  முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கையில், அந்த அமைச்சர் அரசியல் சாசனத்தையும் அறிய மாட்டார்.  பார்லிமென்டில் எப்படி பேச வேண்டும் அல்லது அரசியல் மேடையில் எப்படி பேச வேண்டும் என்பதும் தெரியாது. .

பல்வேறு மொழி, இனம், மதம் சார்ந்த மக்கள் வசிக்கும் நமது நாட்டின் சமூக அமைப்பும் அவருக்கு  தெரியாது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியர்தான். அனைத்து மதத்துக்கும் சம உரிமைஉண்டு. என்று  கூறிஉள்ளார்.

Label