OUR CLIENTS
டெல்லியில் சுஷ்மாவுடன் குல்பூஷண் ஜாதவ் குடும்பம் சந்திப்பு
டெல்லியில் சுஷ்மாவுடன் குல்பூஷண் ஜாதவ் குடும்பம் சந்திப்பு Posted on 27-Dec-2017 டெல்லியில் சுஷ்மாவுடன் குல்பூஷண் ஜாதவ் குடும்பம் சந்திப்பு

டெல்லி, டிச. 27-
டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவுடன் குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினர் சந்தித்தனர். பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க ஏற்பாடு செய்ததற்காக சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்தனர். பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூ‌ஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் நேற்று முன்தினம் சந்தித்தனர். 

பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிய குல்பூ‌ஷண் ஜாதாவுக்கு மரண தண்டனை விதிக்கபட்டது. குல்பூ‌ஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label