OUR CLIENTS
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை Posted on 27-Dec-2017 ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை

சென்னை, டிச. 27-
சுனாமி ஆழிப் பேரலை தாக்கி நூற்றுகணக் கானவர்கள் உயிர் இழந்த சம்பவம் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி நடந்தது.

உயிர் இழந்த மீனவர்கள், சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுனாமி தாக்குதல் சம்பவம் நடந்து 13 ஆண்டு ஆகிறது.

சுனாமி நினைவு நாளையொட்டி நேற்று அரசியல் கட்சியினர், மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி மீனவர் பிரிவு தலைவர் கெஜநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட தொண்டர்கள் பட்டினப் பாக்கம் கடற்கரையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். கடற்கரை பகுதியில் மலர்களை தூவி பால் ஊற்றினர். இதே போல தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் மீனவர் அணி தலைவர் சதிஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்று கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் பலமுறை அரசியலுக்கு வருவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அது குறித்த செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ரஜினி தற்போது அறிவித்துள்ள அறிவிப்பை 31-ந்தேதி நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஊழல்களை அகற்ற அவர் களம் இறங்குவார். ஆர்.கே.நகர் தேர்தலில் புரையோடிய ஊழல் மூலம் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது. திருமங்கலம் முதல் தினகரன் ‘பார்முலா’ வரை ஊழல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ரூ.20 டோக்கன் கொடுத்த மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலுக்கு ரஜினி வந்தால் அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பலம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவொற்றியூர், கே.வி.கே. குப்பம் மீனவர் கிராமத்தில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும்   அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சில பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர், வட்ட செயலாளர் ஆதி குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Label