OUR CLIENTS
விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்
விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள் Posted on 27-Dec-2017 விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, டிச. 27-
விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றுவதற்கான இந்திய அரசின் முயற்சி வருத்தமளிப்பதாக உள்ளது. ஏற்கெனவே விவசாயிகள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கிடையில், 28 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் கூடுதல் அனுமதி கட்டணங்களை விவசாயிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. எனவே, விவசாயிகளின் நலன் காக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Label