OUR CLIENTS
டிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு
டிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு Posted on 27-Dec-2017 டிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு

சென்னை, டிச. 27-
தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார். இவரையும் சேர்த்து தினகரன் அணிக்கு தற்போது 2 எம்.பி.க்கள் வந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வேலூர் எம்.பி.யான செங்குட்டுவன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு நேற்று முன்தினம் வந்த சசிகலா புஷ்பா எம்.பி. அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதவது: ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று, தினகரன் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அரசா ங்கத்தை எதிர்த்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் கூட அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

எனவே, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது பணி ஆர்.கே.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் என்றும் அவருடன்  சேர்ந்து பணியாற்ற  தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தேன்.   ஜெயல லிதாவின் தொகுதியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முழு அதிகாரத்தைப் பயன் படுத்தியும் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதற்காக மத்திய அரசிடம் போராடி வெற்றி பெற வேண்டும். அதற்கான தைரியமும், தலைமைப் பண்பும் தினகரனிடம் இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Label