OUR CLIENTS
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 19 லாரிகள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 19 லாரிகள் பறிமுதல் Posted on 27-Dec-2017 ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 19 லாரிகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, டிச. 27-
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு உரிய அனுமதியின்றி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பாக்கம், கும்மிடிப் பூண்டி சிப்காட் மற்றும் கவரைப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களை கடந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த 3 போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் அதிக அளவில் எடுப்பது இல்லை என்று மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.அவர் கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜனுடன் இணைந்து எளாவூரில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 19 லாரிகளை மடக்கி பிடித்தனர். இதில் 4 லாரிகளின் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். லாரிகளை போலீசார் மடக்கி பிடிக்கும்போது டிரைவர்களிடம் இருந்த செல்போன்களை முதலில் பறிமுதல் செய்தனர். இதனால் பின்னால் வந்த மற்ற மணல் லாரி டிரைவர்களுக்கு அவர்களால் தகவல் ஏதுவும் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து வந்த 19 மணல் லாரிகளும் சோதனையில் சிக்கியது. பிடிபட்ட லாரிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. லாரியில் வந்த 15 டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label