OUR CLIENTS
சென்னை அருகே நூற்றுக்கணக்கான ஏடிஎம் மற்றும் பான்கார்டுகள் எரிந்த நிலையில் மீட்பு
சென்னை அருகே நூற்றுக்கணக்கான ஏடிஎம் மற்றும் பான்கார்டுகள் எரிந்த நிலையில் மீட்பு Posted on 27-Dec-2017 சென்னை அருகே நூற்றுக்கணக்கான ஏடிஎம் மற்றும் பான்கார்டுகள் எரிந்த நிலையில் மீட்பு

சென்னை, டிச. 27-
சென்னை புழல் அருகே சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான பான்கார்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் அருகேயுள்ள சுடுகாட்டில், நூற்றுக் கணக்கான இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், பான்கார்டுகள் ஆகியவை வீசப்பட்டிருந்தன. அவற்றில் சில தீவைத்தும் கொளுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து அங்கு வந்த போலீசார், வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தபோது, அவை புழல் இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டவை என்றும், வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள் 2024 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தும் வகையில் செல்லத்தக்கவையாகவும் இருந்தன. ஏ.டி.எம். அட்டைகள் மட்டுமின்றி, ஏ.டி.எம் பாஸ்வேர்டு ஸ்லிப், மொபைல் பேங்க் பாஸ்வேர்டு ஸ்லிப், நகை ஏல ரசீதுகள், பான்கார்டுகள் உள்ளிட்டவையும் அங்கு கிடந்தன.

வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்களை சுடுகாட்டில் வீசி தீவைத்து யார் என்றும், வங்கி ஊழியர்களே இந்த செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து மோசடி செய்த கும்பல், மோசடிக்குப் பிறகு அவற்றை சுடுகாட்டில் வீசிச் சென்றனரா அல்லது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பணத்தை டெபாசிட் செய்வதற்காக தற்காலிகமாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் ஆவணங்களா என்ற கோணத்தில், புழல் இந்தியன் வங்கியின் மேலாளர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label