OUR CLIENTS
தொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளன: மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
தொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளன: மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை Posted on 27-Dec-2017 தொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளன: மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை

சென்னை, டிச. 27-
தமிழகத்தில் தொழிற் சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்து உள்ளதாக தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள அறிக்கையில்  காவிரி, பவானி, பாலாறு, சரவங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வஷிஸ்டா நதி ஆகியன மாசடைந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கழிவுகள் கலப்பு, தொழிற்சாலை கழிவுகளால் ஆறுகள் வேகமாக மாசடைவதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் 275 ஆறுகள் மாசடைந்து உள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கியநதிகள் மாசடைந்து உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த நதிகளை காக்க மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் தமிழகத்தின் இந்த 7 நதிகள் தான் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை உள்ளிட்டவைகளுக்கு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

Label