OUR CLIENTS
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி Posted on 27-Dec-2017 விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

விருத்தாசலம், டிச. 27-
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தி யாவசிய தேவைகளுக்காக விருத்தாசலம் வந்து செல்கின்றனர். இங்கிருந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு செல்வதற்கும் அரசு பொதுமருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரி கள், பிரசித்திபெற்ற கோயில்கள், ரயில்நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செராமிக் தொழிற் பேட்டை, நீதிமன்றங்கள் ஆகியவைகளுக்கு செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். 

பேருந்துநிலையத்தில் குடிநீர், கழிவறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னை, விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இலவச நவீன கழிப்பறை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக உள்ளது. இந்த கழிவறை வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் உள்ளதால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கட்டணம் மற்றும் இலவச கழிவறையின் கழிவுநீர் நிரம்பி பேருந்துநிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேருந்துநிலையத்தில் உள்ள வியாபார கடைகளில் பயன்படுத்தப்படும் கழிவுபொருட்கள் மற்றும் கழிவுநீரை பேருந்து நிற்கும் இடைப்பட்ட பகுதியில் கொட்டி வருகின்றனர். 

இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தில் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் இலவச கழிவறையை முறையாக பராமரிக்காமல் உள்ளதால் கட்டண கழிவறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில் நகராட்சி நிர்வாகம் உறுதுணையாக இருந்து வருவதாகவும், சில சமயங்களில் கட்டண கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களாகவே வந்து இலவச கழிவறையை சேதப்படுத்துவதும், அவைகளுக்கு வரும் தண்ணீர் இணைப்பை துண்டிப்பதிலும் நகராட்சியினர் ஈடுபடுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதுகுறித்து விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Label