OUR CLIENTS
சென்னை, டிச. 27- சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை, டிச. 27- சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். Posted on 27-Dec-2017 சென்னை, டிச. 27- சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை, டிச. 27-
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப் படுகின்றன.  மேலும் சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும். சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில் முதல்வர் அறிவித்தபடி, அங்கு சி.பா ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப் படும். ஊடக தமிழில் சி.பா ஆதித்தனார் செய்த சீர்திருத்தம் பள்ளி பாடதிட்டத்தில் இடம்பெற உள்ளது. 11-ம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் அவருடைய வரலாறு சேர்க்கப்பட உள்ளது. கிராமத்தில் உள்ள எளிய மக்களும் புரியும் வண்ணம் அவர் தினத்தந்தியில் தமிழை கொண்டு வந்தது தொடர்பான விபரங்கள் அதில் இடம் பெற உள்ளது.

Label