OUR CLIENTS
மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்
மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் Posted on 27-Dec-2017 மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்

மேலூர், டிச. 27-
மேலூர் அருகே உள்ள மட்டங்கிபட்டி கிராமத்தின் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. மட்டங்கிபட்டியில் இருந்து வெள்ளலூர் விலக்கு வரை போட்டிகள் நடைபெற்றன. அதில் பெரியமாடு பிரிவில் 14 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் கோட்டநத்தான்பட்டி மாயத்தேவரின் வண்டி முதல் பரிசை வென்றது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் உடையப்பாவின் வண்டி 2-வது பரிசையும், புதுப்பட்டி மணி என்பவரின் வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

சின்னமாடு பிரிவில் 34 வண்டிகள் பங்கேற்றதால் 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. அதில் முதல்பரிசை மட்டங்கிபட்டி பெரியகருப்பன், பொன்குண்டுபட்டி கருணாகரன் ஆகியோரின் வண்டிகள் பெற்றன. நகரம்பட்டி விஷ்வா மற்றும் வெள்ளலூர் கருணாகரன் ஆகியோரின் வண்டிகள் 2-வது பரிசையும், புலிமலைபட்டி சிவாஜி மற்றும் மதுரை ஆனையூர் செல்வம் ஆகியோரின் வண்டிகள் 3-வது பரிசையும் பெற்றன.

தொடர்ந்து மட்டங்கிபட்டி ஜெகநாதன் மற்றும் புலிமலைப்பட்டி முனிசாமிவண்டிகள் 4-வது பரிசையும், கள்ளந்திரி அழகர்மலையான் மற்றும் ஆட்டுக்குளம் பாபு ஆகியோர்களின் வண்டிகள் 5-வது பரிசையும் பெற்றன. மாட்டுவண்டி பந்தயத்தை மேலூர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ரோட்டின் இருபுறமும் நின்று போட்டிகளை கண்டு ரசித்தனர்.

Label