OUR CLIENTS
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பத்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து:5 பேர் பலி
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பத்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து:5 பேர் பலி Posted on 27-Dec-2017 பழனிக்கு பாதயாத்திரை சென்ற பத்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து:5 பேர் பலி

கோயம்புத்தூர், டிச. 27-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு சென்றுகொண்டிருந்தனர். நேற்று காலை 5.30 மணியளவில் தாராபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து, திடீரென பாதயாத்திரையாக பழனிக்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் நடராஜ், ராஜாமணி, காளிமுத்து மற்றும் விஜயா, பரமேஸ்வரி ஆகிய 5 பக்தர்களும் அரசுப பேருந்து மோத்சி சாய்த்த இடத்திலேயே பலியானார்கள்.. படுகாயம் அடைந்த 2 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு பின் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

Label