OUR CLIENTS
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை Posted on 27-Dec-2017 மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை

சென்னை, டிச. 27-
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டதால், வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

அஞ்சலி நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரைப் பகுதியில் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பலர் வரக்கூடும் என்பதால், கலங்கரை விளக்கம் முதல், அண்ணா சதுக்கம் வரையிலான மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மெரினா கடற்கரைப் பகுதிக்குள் சென்று வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப் படுகின்றனர். 

மாலை 5 மணி வரை, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Label