OUR CLIENTS
தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி டுவிட்டர் பதிவு :அமைச்சர் உதயகுமார் போலீஸில் புகார்
தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி டுவிட்டர் பதிவு :அமைச்சர் உதயகுமார் போலீஸில் புகார் Posted on 27-Dec-2017 தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி டுவிட்டர் பதிவு :அமைச்சர் உதயகுமார் போலீஸில் புகார்

சென்னை, டிச. 27-
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் டுவிட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஜெ.பேரவை பொதுச் செய லாளராக இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் ஆனார். பின்னர் ஓபிஎஸ் பிரிந்தபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது அவரை மாதிரி விசுவாசம் மிக்கவர்கள் யாரும் இல்லை என்று பேட்டி அளித்தார் உதயகுமார்.

இந்நிலையில் ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் வென்றதும் அதிமுகவில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தங்களுக்கு அதிமுகவி லிருந்து சில அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் வரை வாழ்த்துச் சொன்னதாக தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னது போல் டுவிட்டரில் செய்தி வெளியாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்க, அது தனது டுவிட்டர் பக்கம் அல்ல என்றும், நான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.

ஏற்கெனவே (18.12.2017) தினகரன் வேட்பு மனுத்தாக்கல் படத்தை தன் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டது பற்றி காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்த அமைச்சர் உதயகுமார், தற்போது வெளியான வாழ்த்துச்செய்தியை குறிப்பிட்டு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் போலியாக தனது டுவிட்டரில் பதிவிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து அதை தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

எனது கோரிக்கையின் மீது விசாரணை நடைபெற்று வருவதை நான் நன்கு அறிவேன், இச்சூழ்நிலையில், நேற்று மற்றொரு செய்தி அதாவது மேற்குறிப்பிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்வதுபோல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியிடப்படும், இதுபோன்ற செய்திகளை நீக்கம் செய்து சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மீண்டும் தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் உதயகுமாரின் இந்த புகார் சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Label