OUR CLIENTS
திசையன்விளையில் மணல் கம்பெனி மூடப்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு! மணல் கம்பெனியை தமிழக அரசு உடனே திறக்க கோரிக்கை
திசையன்விளையில் மணல் கம்பெனி மூடப்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு! மணல் கம்பெனியை தமிழக அரசு உடனே திறக்க கோரிக்கை Posted on 27-Dec-2017 திசையன்விளையில் மணல் கம்பெனி மூடப்பட்டதால்  50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு! மணல் கம்பெனியை தமிழக அரசு உடனே திறக்க கோரிக்கை

தூத்துக்குடி, டிச.27-
தூத்துக்குடி மாவட்டம், குட்டம், அரசூர் மற்றும் திசையன்விளை பகுதிகளில் மத்திய அரசு ,தமிழக அரசு முறையான அனுமதி பெற்று இம்மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கூடிய வகையில் (மணல் கம்பெனி) ஆரம்பிக்கப்பட்டு மணல் அள்ளி அதில் கிடைக்க கூடிய சிறிதளவு தாதுப் பொருளை பிரித்து எடுத்து விட்டு மணல் அள்ளிய இடத்திலேயே எடுக்கப்பட்ட மணலை கொட்டி நிரப்பும் தொழிலில் மேற்படி மணல் கம்பெனி பல ஆண்டுகாலமாக 50 ஆயிரம் தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தது.

இந்தநிலையில் சிறப்பாக அதே சமயம் முறையாக எல்லா அனுமதியும் பெற்று இந்திய அரசின் கிரீன் சான்று பெற்று தொழில் நடத்தி வந்த இந்த மணல் கம்பெனியை முடிவிட வேண்டும் என்று எண்ணிய தொழில் போட்டியாளர்கள் இந்த கம்பெனியை பற்றி பல்வேறு வேண்டாத புகார்களை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆஷிஸ் குமாரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முன்னாள் ஆட்சியர் ஆஷிஸ் குமார் மேற்படி கம்பெனியை ஆய்வு செய்தார். இதை காரணம் காட்டி பல்வேறு வகையில் முயன்று மேற்படி மணல் கம்பெனியை நடத்த விடாமல் தொழில் போட்டியாளர்கள் 2013-ல் மணல் கம்பெனியை முடிவிட்டனர். இதுபற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூறுகையில் இயற்கை அன்னை பூமியில் விளையக்கூடிய அரிசி, சோளம் மற்றும் காய்கனிகள் விளைந்த பின் அறுவடை செய்த பின் மீண்டும் விதைத்து அறுவடை செய்து அதை விற்பனை செய்பவர்களுக்கு விவசாயிகள் என்று பெயர். இயற்கை உற்பத்தியான மணலை அள்ளி அதில் விளையக்கூடிய தாதுமணலை பிரித்து பின்னர் மணலை அள்ளிய இடத்திலேயே கொட்டி விடுவது விவசாயம் போன்ற தொழில்தான். ஏனென்றால் காய்கனி, பழங்கள், நெல்மணிகள் எப்படி விளைகிறதோ அதை போல் தாதுப்பொருளும் திசையன்விளை பகுதியில் உள்ள மணலில் உற்பத்தியாகக் கூடியதே. இப்படி விவாசயம் போன்ற தொழிலை செய்து வந்த 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்கிறோம் என்று கூட எண்ணாத தொழில் போட்டியாளர்கள் மேற்படி சிறப்பாக செயல்பட்டு வந்த மணல் கம்பெனியை மூடிவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.

 தற்போது இவர்கள் செய்த காரியத்தால் 2013ம் ஆண்டிலிருந்து இன்று வரை மணல் கம்பெனியில் வேலை இழந்து சரிவர வேலை எதுவும் கிடைக்காமல் பசியும், பட்டினியுமாக வாடி வருகின்றனர் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழிலாளர்கள் 2015ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேலை இழந்த தொழிலாளர்கள் தரப்பிலிருந்து சந்தித்து தங்கள் கஷ்டங்களையும், குறைகளையும் எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. 2016-ல் வெற்றி பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா திசையன்விளை பகுதியில் செயல்பட்டு வந்த மணல் கம்பெனி மூடப்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பதாக தெரிகிறது.

அவர்கள் கஷ்டத்தை போக்க, துயர் துடைக்க விரைவில் மூடப்பட்ட திசையன்விளை மணல் கம்பெனியை மீண்டும் திறந்து செயல்பட ஆவண செய்வேன் என்று கூறியதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் அம்மா திடீரென காலமானதால் தற்போது அம்மாவின் சீரிய வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து பேசி தொழில் இழந்து பசி, பட்டினியால் வாடும் தொழிலாளர்களான எங்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்திட எவ்வித முறைகேடும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டு வந்த திசையன் விளை மணல் கம்பெனியை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக எங்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கண்ணீருடன் 
கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label