OUR CLIENTS
குடிநீர் குழாய் புதைக்க தோண்டிய பள்ளம் சரியாக மூடாததால் அவதி!
குடிநீர் குழாய் புதைக்க தோண்டிய பள்ளம் சரியாக மூடாததால் அவதி! Posted on 27-Dec-2017 குடிநீர் குழாய் புதைக்க தோண்டிய  பள்ளம் சரியாக மூடாததால் அவதி!

பூவிருந்தவல்லி, டிச.27-
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அடுத்த மணலியில் குடிநீர் குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் சரியாக மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் குடிநீர் குழாய் சரியில்லாத காரணத்தால் புதிய குழாய்களை புதைக்க பள்ளம் தோண்டியுள்ளனர். ஆனால் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி மின் ஒயர் மேலே கம்பத்தில் இருப்பதால் மழைக்காலங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படும் நிலையில் உள்ளது. அரசு மின் ஒயரை தரையில் புதைக்க உத்தரவிட்டது. இதையும் சரியாகச் செய்யாமல் ஒயரை தரையில் புதைத்துவிட்டு வீட்டுக்கு இணைப்பை கொடுக்காமல் அலைகழிக்கின்றனர் மின்வாரிய களப்பணியாளர்கள். இதனால் பல இன்னல்கள் அரங்கேறியுள்ளன.

உடனே மணலி அண்ணா சாலை பகுதியில் மின் இணைப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 
இந்த மணலி கிராமத்தை சென்னையில் மண்டலம் 19ல் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Label