OUR CLIENTS
தவறாக சுடப்பட்டார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்!
தவறாக சுடப்பட்டார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்! Posted on 27-Dec-2017 தவறாக சுடப்பட்டார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்!

சென்னை, டிச.27-
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தவறாக சுடப்பட்டார் என தமிழக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்ஸ்பெக்டரை கொள்ளை யர்கள் சுடவில்லை என ராஜஸ்தான் போலீசார் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சக இன்ஸ்பெக்டரான முனிசேகர்தான் தவறுதலாக சுட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. முனிசேகர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

Label