OUR CLIENTS
அரசு கிடங்குகளில் ரூ.28 கோடி ஊட்டச்சத்து மருந்துகள் காலாவதி?
அரசு கிடங்குகளில் ரூ.28 கோடி ஊட்டச்சத்து மருந்துகள் காலாவதி? Posted on 27-Dec-2017 அரசு கிடங்குகளில் ரூ.28 கோடி  ஊட்டச்சத்து மருந்துகள் காலாவதி?

சென்னை, டிச.27-
தமிழகத்தில், ஆண்டு தோறும், கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய, 28 கோடி ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து மருந்துகள், கிடங்குகளில் முடங்கி, காலாவ தியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடவடிக்கை இல்லை : தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் முதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை, கர்ப்பிணி களுக்கு, ரத்த சோகை, நீர் சத்து போன்றவற்றை போக்க, ஊட்டச்சத்து மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை, மாநிலம் முழுவதும் உள்ள, 42 மருந்து கிடங்குகள் வாயிலாக, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்நிலையில், அனைத்து மருந்து கிடங்குகளிலும், தகுதி வாய்ந்த மருந்தாளுனர்கள் இல்லாததால், எழுத்தர் போன்ற பணியில் இருப்பவர்களே, மருந்துகளை கையாள்கின்றனர். 

அவர்கள், மருந்துகள் காலாவதி தேதி பற்றி ஆராயாமல், கேட்கும் மருந்துவ மனைகளுக்கு மட்டும், மருந்துகளை வினியோகித்து வருவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து, மருந்தாளுனர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 1,100 மருந்தாளுனர் பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இது குறித்து, அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. 

காலி பணியிடங்கள் : பல ஆரம்ப சுகாதார நிலையங்களில், தகுதி யற்றோர் வாயிலாக, மருந்து வினியோகம் நடக்கிறது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், மருந்தாளுனர் கல்வி கற்கும் மாணவர்கள், வினியோகித்து வருகின்றனர். மருந்தாளுனர்கள் குறைவால், ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஊட்டச்சத்து மருந்துகள், கிடங்குகளில், காலவாதியாகி, வீணாக எரிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண, மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label