OUR CLIENTS
மன்னார்குடி கும்பலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!
மன்னார்குடி கும்பலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! Posted on 27-Dec-2017 மன்னார்குடி கும்பலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

சென்னை, டிச.27-
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் உள்ள நிர்வாகிகளை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., அணிகள் இணைந்ததும், சசிகலா குடும்பத்தினர், கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டனர்.

தினகரன், தனியாக செயல்படத் துவங்கினார். தனக்கு பின்னால் ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் வருவர் என, எதிர்பார்த்தார். அதிக, எம்.எல்.ஏ.,க்கள் வந்தால், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என, நினைத்தார். ஆனால், 18 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் வந்தனர். மற்ற, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, அவர் பக்கமே நின்று விட்டனர். தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்தார். ஆனால், சபாநாயகர், அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அடுத்தகட்டமாக, கட்சி மற்றும் சின்னத்தை பெற முயற்சித்தார். அதுவும், பன்னீர் - பழனிசாமி அணிக்கே சென்றது. அதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளித்த, எம்.பி.,க்களும், நிர்வாகிகளும், அ.தி.மு.க., விற்கே திரும்பினர். இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. 

இதில், வெற்றி பெற்றால் தான் அரசியல் எதிர்காலம் என்பதால், தினகரன் பணத்தை வாரி இறைத்தார்; வெற்றியும் பெற்று விட்டார். அடுத்தகட்டமாக, அ.தி.மு.க.,வை கைப்பற்ற, சசிகலா குடும்பத்தினர் முயற்சிகளை துவக்கி உள்ளனர். தற்போதுள்ள நிர்வாகிகளை வைத்து, கட்சியை கைப்பற்ற முடியாது. தனிக்கட்சி துவக்கினாலும், அவர்களை மட்டும் வைத்து, பொதுத் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, அ.தி.மு.க.,வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். 

‘தினகரனுக்கு ஆதரவாக, மக்கள் உள்ளனர். இங்கு வந்தால் தான், எதிர்காலத்தில் வெற்றியை பெற முடியும். 

பன்னீர் மற்றும் பழனி பின்னால் சென்றால், அரசியல் வாழ்வு சூனியமாகிவிடும். எனவே, இங்கு வந்து விடுங்கள்’ என, அழைப்பு விடுக்கின்றனர். அதே போல, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்கின்றனர். இன்னும் சில, எம்.எல்.ஏ.,க்கள் வந்தால், ஆட்சியை கவிழ்த்து விடலாம். பொதுத் தேர்தல் வரும் போது, கட்சி தம் பக்கம் வந்து விடும் என, கணக்கு போட்டு, எம்.எல்.ஏ.,க்களை விலை பேசி வருகின்றனர்.

Label