OUR CLIENTS
ஓகி புயல் இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி அறிவிப்பு!மத்திய நிபுணர் குழு இன்று குமரியில் ஆய்வு
ஓகி புயல் இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி அறிவிப்பு!மத்திய நிபுணர் குழு இன்று குமரியில் ஆய்வு Posted on 28-Dec-2017 ஓகி புயல் இடைக்கால நிவாரணமாக  தமிழகத்திற்கு ரூ.133 கோடி அறிவிப்பு!மத்திய நிபுணர் குழு இன்று குமரியில் ஆய்வு

புதுடெல்லி, டிச.28-
தமிழகத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நேற்று ஒதுக்கீடு செய்துள்ளது.

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, சேத மதிப்பீட்டின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்ய மத்திய நிபுணர் குழு நேற்று சென்னை வந்தது. கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள இயலாமல் இன்றளவும் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போயினர்.

அவர்களை மீட்கும் பணியில், மாநில அரசுகளுடன் இணைந்து, கடலோரக் காவல்படையும், கடற்படையும் ஈடுபட்டன. எனினும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுக்கவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு அவசர தேவைக்காக இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

சென்னைக்கு நேற்று வந்துள்ள 8 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு இன்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இங்கு பாதுப்புகளை ஆய்வு செய்து, சேத மதிப்பீடுகளை அறிக்கையாக தயார் செய்யும். இந்த அறிக்கை சமர்ப்பித்த பிறகு, கூடுதல் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்த போது ஓகி புயல் நிவாரண நிதியாக சுமார் 5,255 கோடி ரூபாய் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label