OUR CLIENTS
ஆண் வேடமிட்டு 3 இளம்பெண்களை திருமணம் செய்த பெண் கைது
ஆண் வேடமிட்டு 3 இளம்பெண்களை திருமணம் செய்த பெண் கைது Posted on 28-Dec-2017 ஆண் வேடமிட்டு 3 இளம்பெண்களை திருமணம் செய்த பெண் கைது

திருமலை, டிச. 28-
ஆண் என்று கூறி மூன்று இளம் பெண்களை திருமணம் செய்த கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகில் உள்ள காசிநயன மண்டலத்தில் இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி.(18). இளம் பெண்ணான ரமாதேவி சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறாராம். ரமாதேவி தன்னை ஆண் போல் வேடம் போட்டுக் கொண்டு,கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பீமகுண்டத்தை சேர்ந்த 17 வயது நிர்மலா,அனந்தபூர் மாவட்டம் கொத்தசெருவு கிராமத்தைச் சேர்ந்த வந்தனா, கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தட்டூரை சேர்ந்த புஜ்ஜி ஆகியோரை மோசடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், எனக்கு அவசர வேலைகள் உள்ளன. விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்துச் சென்று குடி வைக்கிறேன் என்று கூறிவிட்டுச் செல்லும் ரமாதேவி திரும்பி வருவதே இல்லையாம்.

ரமாதேவி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் நிர்மலா. இவர்தான் ரமாதேவி ஆண் என்று தன்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து கொண்டார் என்று ஜம்மலமடுகு போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரமாதேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆண் என்று கூறி 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Label