OUR CLIENTS
நவுஷிரா எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
நவுஷிரா எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் Posted on 28-Dec-2017 நவுஷிரா எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு, டிச. 28-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கு தல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவுஷிரா பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் காலை 8.55 மணியளவில் தொடங்கி 9.10 மணி வரை துப்பாக்கி சிறு பீரங்கிகளை கொண்டு சரமாறியாக தாக்குதல் நடத்தியது. இதுவரை ராணுவத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷர்கர் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். டிசம்பர் 24 ம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்  பாகிஸ்தானிய படைகள் கடுமையான துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது என்று  இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label