OUR CLIENTS
உலக வங்கியில் பெறும் கடனை ஊழல் நடைபெறாமல் விவசாயத்துக்கு செலவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
உலக வங்கியில் பெறும் கடனை ஊழல் நடைபெறாமல் விவசாயத்துக்கு செலவிட வேண்டும்: ஜி.கே.வாசன் Posted on 28-Dec-2017 உலக வங்கியில் பெறும் கடனை ஊழல் நடைபெறாமல் விவசாயத்துக்கு செலவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை, டிச. 28-
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு தமிழக விவசாயத்தை நவீனப்படுத்த உலக வங்கியிடம் சுமார் ரூ. 2,036 கோடி கடன் பெற ஒப்பந்தம் போட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் பெறப்படும் கடன் உதவியின் மூலம் தமிழகத்தில் நீர்ப்பாசன அமைப்புகளுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வழி செய்யும் வகையில், தமிழக நீர்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டம் நடைபெற உள்ளது.

குறிப்பாக 4,800 நீர்ப் பாசன தொட்டிகள் மற்றும் 66 துணை நீர்த்தேக்கத்தின் குறுக்கே உள்ள 477 தடுப்பணைகள் ஆகியவை மறுசீரமைப்பு மற்றும் நவீனமயம் ஆக்கப்படும் என்பதுதான் இத்திட்டத்தின் மிக முக்கியப் பணிகள். இத்திட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும், சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால் பெறப்படுகின்ற பணத்தை செலவளிக்க முன்வரும் போது எந்த பணிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறதோ அந்த பணமானது அந்த பணிக்கு லஞ்சம், ஊழலுக்கு இடம் கொடுக்காத வகையில் செலவிடப்பட வேண்டும். காரணம் நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, ஏரி, குளங்களை ஏற்கனவே தூர் வாரியதில் முறைகேடுகள் நடை பெற்றதாக பல கட்டங்களில் தகவல்கள் வெளிவந்தன. எனவே இனி வரும் காலங்களில் அதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத வண்ணம் பணிகளை துரிதமாக, முறையாக மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் தற்போதைய இந்த திட்டத்தால் உலக வங்கியில் இருந்து பெறப்படும் தொகையானது முழுமையாக, சரியாக, முறையாக தமிழக நீர் நிலைகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் விதமாக மட்டுமே பயன்படுத்திட வேண்டும் இதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு- மத்திய அரசின் இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Label