OUR CLIENTS
முன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
முன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted on 28-Dec-2017 முன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை, டிச. 28-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், தனக்கு முன்ஜாமீன் வழங்க  கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முந்தைய தினத்தன்று, திடீரென செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 படியும், குற்றவியல் தடுப்பு சட்டம் 188ன்  படியும் வழக்கு பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர், சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தற்போது தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனு 
ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விடுமுறை நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் 
என எதிர் பார்க்கப்படுகிறது.

Label