OUR CLIENTS
நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வெட்டிக் கொலை
நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வெட்டிக் கொலை Posted on 28-Dec-2017 நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி, டிச. 28-
நெல்லையில் பைக்கில் சென்ற ஓய்வு­பெற்ற போலீஸ்காரர் மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

நெல்லை ஜங்ஷன் சிந்துபூந்துறையை சேர்ந்த பிரபாகரன் மகன் மணிகண்டன் (40). இவர் கடந்த 2003ம் ஆண்டு ஆயுதப்படை போலீசில் சேர்ந்­தார். 10 ஆண்­டுகள் பணியாற்றிய பிறகு அவர் கடந்த 2013ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பின்னர் வெளநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த ஓராண்டிற்கு முன் ஊருக்கு வந்த மணிகண்டன் நெல்லை ஜங்ஷன் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணிக்கு தச்சநல்லூரில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். உடையார்பட்டி திருமண மண்டபம் அருகே வந்த போது, பைக்கை மர்மநபர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டினர். 

இதில் அவரது தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயத்தடன் ரத்த வெள்­ளத்­தில் கிடந்­தார். அந்த வழியாக சென்றவர்கள் தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை போலீசார் தங்களது வாகனத்திலேயே கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழி­யில் அவர் இறந்தார். இது குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணகண்டனை கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொழில் போட்டியா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label