OUR CLIENTS
கபாலியை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்
கபாலியை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் Posted on 14-Jul-2016 கபாலியை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்

ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் இந்திய மொழி படங்களை தயாரிப்பதுடன், படங்களை விநியோகிக்கவும் செய்கிறது. கபாலியையும் இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது.

கபாலிக்கு யு சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படம் வரும் 22 -ஆம் தேதி வெளியாகும் என்று தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது.
 
வடஇந்தியாவில் கபாலியை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுகிறது. கேரளாவில் மோகன்லாலின் நிறுவனம் கபாலி வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கிறது.
 
பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் ஹாலிவுட் திரைப்படமான ஐஸ் ஏஜ் ஐந்தாம் பாகம் வரும் 15 -ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Label