OUR CLIENTS
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் புயல் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் புயல் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை! Posted on 28-Dec-2017 புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் புயல்  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரி, டிச.28-
 பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு, சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியை, உடனடியாக வழங்க வேண்டும் என, சட்டசபை செயலருக்கு, அரசு செயலர் கடிதம் அனுப்பியது, புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

புதுச்சேரியில், பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை, நியமன எம்.எல்.ஏ.,க் களாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 23ம் தேதி நியமித்தது. அவர்களுக்கு, ஜூலை மாதம் 4ம் தேதி, ராஜ்நிவாசில் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்கள், சட்டசபை யில் இருக்கை உள்ளிட்ட வசதிகள் கேட்டு, சட்டசபை செயலரிடம் கடிதம் கொடுத்தனர். கவர்னர் பதவிப் பிரமா ணம் செய்து வைத்தது குறித்து, ராஜ்நிவாசில் இருந்தும், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், ‘எம்.எல்.ஏ.,க் கள் நியமனம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து முறைப்படி தகவல் ஏதும் இல்லை’ என, கூறி, அக்கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பினார். அதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறையிட்டதன் பேரில், நியமன எம்.எல்.ஏ.,க்கள் குறித்து விளக்கமான கடி தம், புதுச்சேரி அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லாது என, சென்னை ஐகோர்ட்டில், காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்தை தொடர்ந்து, இப்பிரச்னை கிடப்பில் போடப்பட்டது.

கடந்த மாதம் 23ம் தேதி புதுச்சேரி சட்ட சபை கூட இருந்த நிலையில், உரிய அதிகாரமுள்ள நபரால் எம்.எல். ஏ.,க்கள் நியமனம் இல்லை என கூறி, நியமன எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை மீண்டும் சபாநாயகர் நிராகரித்து, அவர்களுக்கு, சட்டசபை செயலர் மூலம் கடிதம் அனுப்பினார். சபாநாயகரின் முடிவு குறித்து, நியமன எம்.எல்.ஏ.,க்கள், மத்திய உள்துறைக்கு புகார் தெரிவித்தனர். எம்.எல்.ஏ., சாமிநாதன், தலைமை செயலகத்தில், புதிய தலைமை செயலர் அஸ்வனிகுமாரை சந்தித்து, உள்துறை அமைச்சகத்தின் நியமன உத்தரவு, புதுச்சேரி அரசிதழில் வெளியான அரசாணை ஆகியவற்றை காண்பித்து, சட்டசபை யில் இடம் ஒதுக்க நட வடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசித்து முடிவெடுப்பதாக, அவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய உள்துறையிடம் இருந்து, தலைமை செயலகத்திற்கு இரண்டாவது கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, ‘மத்திய அரசு நியமித்த, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கும், சம்பளம் மற்றும் இதர படிகள், தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக வழங்க வேண் டும்‘ என, புதுச்சேரி அரசியலமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பு செயலர் கண்ணன், சட்டசபை செயலர் மற்றும் உள்ளாட்சித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் . அந்த கடிதத்தில், ‘யூனி யன் பிரதேச சட்டம் 1963ன் படியே, நியமன எம்.எல்.ஏ.,க்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அதே சட்டத்தின்படி, கவர்னரும் பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.


யூனியன் பிரதேசத்திற்குள்ள அதிகாரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் கடந்த நவ., 22ம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் தடையாணை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வில்லை.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட, உள்துறை அமைச்சகத்தால் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதால், இதில், ஜனாதிபதியின் முடிவே இறுதியானது. எனவே, இந்த நியமனத்தில் நியா யம், நியாயமில்லை என்று, சட்டசபை சபாநாயகர் கூற முடியாது’ என, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் சாராம்சம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

கடிதத்துடன், மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை செயலகத்திற்கு அனுப்பிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம், கிடப்பில் போடப்பட்டிருந்த நிலை யில், அவர்களுக்கு சம்பளம், தொகுதி மேம்பாட்டு நிதி, உடனடியாக வழங்க வேண்டும் என்ற, உத்தரவு கடிதம், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label