OUR CLIENTS
ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும்: பேஸ்புக் வலியுறுத்தல்
ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும்: பேஸ்புக் வலியுறுத்தல் Posted on 29-Dec-2017 ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும்: பேஸ்புக் வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச.29-
ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருகிறது.

சமூக வலைதளத்தை பயன் படுத்துவோர் இவற்றில் தங்கள் உண்மையான பெயரை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இது இந்தியாவில் சோதனை அடிப் படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஒருவர் எந்தப் பெயரில் அறியப்படுகிறாரோ அதே பெயரை அவர் பேக்புக்கில் பயன்படுத்துவதை உறுதிப் படுத்த விரும்பினோம். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை எளிதில் அடையாளம் காணமுடியும். இது சோதனை அடிப்படையிலான முயற்சி. நாங்கள் ஆதார் எண்ணை கேட்கவில்லை.

ஆதார் அடிப்படையில் பெயரை மட்டுமே கேட்கிறோம்” என்றார். பேஸ்புக்கின் இந்த புதிய சோதனை முயற்சி குறித்து ரெடிட், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் தங்கள் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். சிலர், “இந்தியாவுக்கு இது புதிதாக இருந்தாலும், நீண்ட காலமாகவே பேஸ்புக் இதுபோன்ற சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

Label