OUR CLIENTS
சி.பி.ஐ. ஊழல் வழக்குகளில் 3200 பேர் விடுதலை
சி.பி.ஐ. ஊழல் வழக்குகளில் 3200 பேர் விடுதலை Posted on 29-Dec-2017 சி.பி.ஐ. ஊழல் வழக்குகளில் 3200 பேர் விடுதலை

புதுடெல்லி, டிச. 29-
சி.பி.ஐ.யால்  வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட 3200க்கும்மேற்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளில்விடுதலை செய்யப்பட்டனர்..

சி.பி.ஐ. பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகள் பற்றி லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திரசிங் அளித்த பதில் வருமாறு: கடந்த  2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை 4 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டில் 3200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஆனால் அவர்களை கோர்ட்டு விடுவித்து விட்டது. 2017ம் ஆண்டு நவம்பர் வரை 184 ஊழல்வழக்கில் 755 பேர் கோர்ட்டுகளில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 2016ம் ஆண்டு 944 பேர், 2015ல் 821 பேர், 2014ம் ஆண்டு 748 பேர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த 1800 ஊழல் வழக்கில் 3617 பேர் தண்டனை பெற்றுள்ளார்கள் . இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை 741 பேர் கோர்ட்டுகளில் தண்டனை பெற்று உள்ளனர். 2016ம் ஆண்டு 503 ஊழல் வழக்கில் 1005 பேரும், 2015ம் ஆண்டு 434 வழக்கில் 878 பேரும், 2014ம் ஆண்டு 509 வழக்குளில் 993 பேரும் தண்டனை பெற்று இருக்கிறார்கள்.
சி.பி.ஐ. வழக்கு விசாரணைகளில் மத்திய அரசு தலையிடுவது இல்லை. தீர்ப்புகளை அனைத்தையும் சி.பி.ஐ. விசாரித்து ஆய்வு செய்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தகுதி உள்ளதாக இருந்தால் அரசு அனுமதி பெற்ற பிறகு மேல் கோர்ட்டுகளில் அப்பீல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label