OUR CLIENTS
டிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
டிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Posted on 29-Dec-2017 டிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, டிச. 29-
டிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்து அளித்த பேட்டி: சோதனைகளை எல்லாம் சாதனைகளாக படைத்த இயக்கம் அ.தி.மு.க. நான் கூறுவது அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டருடைய கருத்து. 1 கோடி தொண்டர்களின் கருத்து.  டிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த ஒரு நெருக்கடியும் கிடையாது. மூட்டைப்பூச்சி என்பது நசுக்கப்படக்கூடிய ஒன்று. மூட்டைப்பூச்சிக்கெல்லாம் அதிமுக பயப்படாது. எத்தனையோ மூட்டைப்பூச்சிகளை எல்லாம் பார்த்த இயக்கம். ரூ.20 டோக்கனால் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடத்தல் காரர்களான பில்லாவும், ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது. 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவது அதிமுகவின் கட்சியும், ஆட்சியும்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Label