OUR CLIENTS
தமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம்
தமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம் Posted on 29-Dec-2017 தமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம்

சென்னை, டிச. 29-
தமிழகத்தின் முதல் பாஜ தலைவர் நாராயண் ராவ் மரணம் அடைந்தார்.தமிழக பாஜவின் முதல் மாநில தலைவராக 1980 முதல் 1985 வரை செயல்பட்டவர் கே.நாராயண் ராவ். இவர், மேற்கு தாம்பரத்தில் உள்ள அவரது  இல்லத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 1.50 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பாஜ தலைவர்கள் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு, நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. 

பாஜ மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கில் செய்தியில், “அரசியலில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சர்வ கட்சி தலைவர். அவரது மறைவு தமிழக பாஜவுக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஜனசங்கம் காலம் தொட்டு இன்றளவும் என்னைப் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருந்த நாராயண் ராவ் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கின்றேன் என கூறியுள்ளார்.

Label