OUR CLIENTS
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு:தனியார், அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்!
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு:தனியார், அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்! Posted on 03-Jan-2018 தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு:தனியார், அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்!

சென்னை, ஜன.3-
மத்திய அரசு மக்களவையில் அறிமுகப் படுத்தியுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடெங்கிலும் உள்ள தனியார், மற்றும் அரசு மருத்துவர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் காலையில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்வியை முறைப்படுத்தும் அமைப்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் தற்போது விளங்கி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர வகை செய்யும் மசோதாவை மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல இடங்களில் போரா ட்டத்தில் ஈடு பட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை உள்பட 19 அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நேற்று காலை 9:00 முதல் 10:00 மணி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்களின் ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்பால், மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த புறநோயாளிகள், ஒரு மணிநேரம் சிகிச்சை எதுவும் கிடைக்காமல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவர் கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில், அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் பணியில் இருந்ததால், உடனடி சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் மட்டும் மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 1 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவசர அறுவை சிகிச்சைகள், பிரசவம் உள்ளிட்ட முக்கிய மருத்துவ சேவைகளைத் தவிர பிற பணிகளில் இன்று ஈடுபடமாட்டோம் என இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா ‘‘மத்திய அரசு பரிந்துரைத்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ துறைக்கு அதிக நன்மையை தரும். இந்த மசோதா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தவறான புரிதல்களை நீக்க வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.

Label