OUR CLIENTS
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாக்.குடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதி
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாக்.குடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதி Posted on 03-Jan-2018 பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாக்.குடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதி

புதுடெல்லி, ஜன. 3-
எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு  ஆகியவற்றை   பாகிஸ்தான் நிறுத்தும்வரை  அந்த நாட்டுடன்  கிரிக்கெட் போட்டி கிடையாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  உறுதிப்பட கூறினார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வருகிறது. ஜம்மு&காஷ்மீரில் செயல்படும் பயங்கர வாதிகளுக்கு ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது. இது தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டுடனான கிரிக்கெட் போட்டியும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வெளியுறவு விவகாரம் தொடர்பான பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடந்தது.  இதில் வெளியுறவுத்துறை  இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அண்டை நாடுகளுடனான உறவுகள் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.

அப்போது  பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவிற் கான பாகிஸ்தான் தூதரை சந்தித்து பேசியதாகவும், இருநாடுகளும் தங்கள் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 70 வயதை கடந்த கைதிகளை மனிதாபிமான அடிப்படையில்  விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இது தவிர நடுநிலையான நாட்டில் இந்தியா–பாக். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா சுவராஜ், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மற்றும் எல்லையில் அத்துமீறிய தாக்குதலை பாகிஸ்தான்  நிறுத்தும் வரையில் அந்தநாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என குறிப்பிட்டார்.

 பயங்கர வாதமும், கிரிக்கெட் போட்டியும் கைகோர்த்து செல்ல முடியாது என சுஷ்மா திட்டவட்டமாக குறிப்பிட்டதாக உறுப்பினர் ஒருவர் கூறினார். சீனா மற்றும் மாலத்தீவுகள் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளித்து உள்ள வெளியுறவுத்துறை, இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமானது, சுமூகமானது. இந்தியா - மாலத்தீவு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பும்  மேம்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டு இருக்கிறது.

Label