OUR CLIENTS
23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை!
23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை! Posted on 03-Jan-2018 23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை!

புதுடெல்லி, ஜன. 3-
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில், நாடு முழுவதும், ‘கூகுள்’ நிறுவன உதவியுடன், ரயில் நிலையங்களில், இணையதள இணைப்புக்காக, இலவச, ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், சென்னை, சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், அரக்கோணம், காட்பாடி, கோவை, மேட்டுப்பாளையம், குன்னுார், ஊட்டி மற்றும் கேரளா, கர்நாடகாவில் ஆறு நிலையங்கள் உட்பட, 23 நிலையங்களில், ‘வைஃபை’ வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வசதிக்கு பயணியர் தரப்பில் பலத்த வரவேற்பு உள்ளதால், தெற்கு ரயில்வேயில் மேலும் 26 நிலையங்களில் ‘வைஃபை' வசதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Label