OUR CLIENTS
அரசியலில்லாத தனித்தன்மையுடன் ராணுவ மதிப்பை பேணிக்காப்பீர்: ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் அறிவுரை
அரசியலில்லாத தனித்தன்மையுடன் ராணுவ மதிப்பை பேணிக்காப்பீர்: ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் அறிவுரை Posted on 03-Jan-2018 அரசியலில்லாத தனித்தன்மையுடன் ராணுவ மதிப்பை பேணிக்காப்பீர்:  ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் அறிவுரை

புதுடெல்லி, ஜன. 3-
அரசியலில்லாத தனித்தன்மை உள்பட ராணுவத்தின் முக்கிய மதிப்புகளை கூடுதல் ஆர்வத்துடன் பேணி க்காப்பாற்றுங்கள் என்று அனைத்து வீரர்களுக்கும் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், படையினருக்கு வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அதில் இந்தியாவின் வலிமையான தேசிய சக்தியாக ராணுவம் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.  டோக்லம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கு எதிராக 73 நாட்களாக இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதையும், ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: 2017ம் ஆண்டு  நாட்டின் உள்ளேயும் அதே போன்று வெளியேயும் சவால்களை வெற்றிகரமாக  உறுதியுடன் சந்தித்து  ராணுவம்  பெருமை சேர்த்து உள்ளது. எங்கள் நம்பகமான விசுவாசம், நாட்டிற்கான அர்ப்பணிப்பு, அரசியலற்ற நிலை ஆகியவைபாதுகாக்க வேண்டும் என்ற தனித்தன்மையை நமக்கு அளிக்கிறது. நமது முக்கிய மதிப்புகளை நிலை நிறுத்துகையில்  கூடுதல் ஆர்வத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நேர்மை ,விசுவாசம், கடமை, மரியாதை, தன்னலமற்ற சேவை, வீரம், மற்றும் மரியாதை ஆகியவை மூலம் நமது அரசியல மைப்பு கடமைகளை யும், ஒதுக்கப் பட்ட கடமைகளையும்  நிறைவேற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு முழுவ தும்  பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, ஊடுருவல், மற்றும் நாட்டின்  எல்லைகளை பாதுகாப்பதில் ராணுவம் வெற்றிகரமாக செயலாற்றி இருக்கிறது. நாம் நேர்மையுடன் பணியாற்றி இருக்கிறோம். பணியின்போது  உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். ராணுவத்தின் சிறந்த மரபுகளை , பாரம்பரியத்தை , பொறுப்புகளை பேணிக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Label