OUR CLIENTS
ராணுவத்தினர் பலியாகவே பிறந்தவர்கள்: பாஜக எம்பி கருத்தால் சர்ச்சை
ராணுவத்தினர் பலியாகவே பிறந்தவர்கள்: பாஜக எம்பி கருத்தால் சர்ச்சை Posted on 03-Jan-2018 ராணுவத்தினர் பலியாகவே பிறந்தவர்கள்:  பாஜக எம்பி கருத்தால் சர்ச்சை

உ.பி., ஜன. 3-
ராணுவத்தினர் பலி யாகவே பிறந்தவர்கள் என்ற உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி.யின் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்மையில் தீவிரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியானது குறித்து பா.ஜ.க எம்.பி.யான நேபாள் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ராணுவத்தினர் பலியாகவே எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். துப்பாக்கி குண்டுகளை செயலிழக்கச் செய்வது போன்ற ஒரு பொருளைக் காட்டினால் அதை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக கூறிய அவர், துப்பாக்கிக் குண்டுகள் ராணுவ வீரர்கள் மீது படாமல் தடுக்கும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டிருப்ப தாக கிண்டலாகக் கூறியிருப்பதும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

Label