OUR CLIENTS
தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் Posted on 03-Jan-2018 தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன. 3-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா பணிகளை தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார். ஆளுநர் அரசு பணி மையங்களில் ஆய்வு செய்வதற்கு எதிராக தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தஞ்சைக்கு வந்துள்ளார். முதல் நாளான நேற்று தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சலங்கை நாதம் கலைவிழாவின் நிறைவு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், கலைகள் இந்தியர்களை உணர்வுப் பூர்வமாக இணைப்பதாகத் தெரிவித்தார். சலங்கை நாதம் விழாவில் 24 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1500 கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நேற்று பிற்பகல் ஆளுநர் பன்வாரிலால் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றார். இந்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது, ஆளுநர் அரசுப் பணிகளை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க .வினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர் பேரணியாக வந்து புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தஞ்சை சரபோஜி கல்லூரி அருகே போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அந்த இடத்தில் கோஷமிட்டவாறே ஆளுநருக்கு கறுப்புக் கொடிகளை காட்டிய தி.மு.க.வினர் ஆளுநரின் வாகனம் கடந்து சென்றபோது கறுப்புக் கொடிகளை சாலையில் வீசினர்.

திமுகவினர் சாலையில் வீசிய கறுப்புக் கொடிகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அப்புறப்படுத்தினர். ஆளுநரின் வாகனம் கடந்து சென்றபின் தி.மு.க.வினர்  கோஷமிட்டவாறே கலைந்து சென்றனர்.

Label